ஆபிரிக்க நாடான சிம்பாவேயில் பேருந்தும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹராரேயிலிருந்து பெய்ட்ரிட்ஜுக்கு பயணித்த பேருந்து எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதியதில் இந்த பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
ஹராரேயிலிருந்து பெய்ட்ரிட்ஜு நோக்கி 65 பயணிகளுடன் சென்ற பேருந்து, முன்னால் சென்ற மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது, எதிர்திசையில் வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விபத்துச் சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புப் பணியாளர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர். மேலும், இந்த விபத்துக்கான காரணங்களை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிம்பாவேயில் நிகழ்ந்த இந்த கோர விபத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பெரும் சோகத்தைக் ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பாகக் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.