டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வேகமாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்திலிருந்தே பாஜக முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி 70 தொகுதிகளில் 46 இடங்களில் பாஜக, 24 இடங்களில் ஆம் ஆத்மி, ஒரே ஒரு இடத்திலும் காங்கிரஸ் முன்னிலை பெற்றது.
டெல்லியில் கடந்த பல ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த ஆம் ஆத்மி கட்சி, இந்த தேர்தலில் கடும் பின்னடைவினை சந்திக்கிறது. தேர்தல் முடிவுகள் வரும் நேரத்தில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆட்சி அமைக்க நெருக்கமாக உள்ளது.
அதிபவலாக திகழ்ந்த புதுடில்லி தொகுதியில், ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டிருந்தார். ஆனால், அவர் எதிர்பாராத தோல்வியை சந்தித்து, பாஜக வேட்பாளர் அவரை வீழ்த்தியுள்ளார்.
இதுவரை டெல்லியில் ஆம் ஆத்மி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், தற்போதைய தேர்தல் முடிவுகள் தலைநகரின் அரசியல் வரலாற்றை புதிய முறையில் மாற்றியமைக்கிறது.
மொத்தத்தில், “மாற்றம்” பேசி ஆட்சியை பிடித்த கெஜ்ரிவால் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார். மோடியின் பாஜக, 25 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் ஆட்சியை பிடிக்கத் தயார் நிலையில் உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் இந்திய அரசியல் தளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.