கிழக்கு மாகாணத்தின் புதிய பிரதிப்பொலிஸ் மா அதிபராக வருண ஜெயசுந்தர நியமிக்கப்பட்டு, இன்று (14) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
மட்டக்களப்பு கிழக்கு மாகாண பொலிஸ் காரியாலயத்தில் வைத்து புதிய பிரதிப்பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தர இன்று (14) தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். அவர் இந்த பதவியை ஏற்கும் நிகழ்வில் உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.