இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை அத்துமீறல் – காரைக்காலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

tubetamil
0

 இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு எதிராக தமிழகத்தில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, காரைக்காலில் இன்று (14) நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையுடன் முன்னெடுக்கப்பட்டது.



கடந்த சில நாட்களாக, இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை அத்துமீறி கைது செய்து துன்புறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு 40 இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டதோடு, 9 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


இதனைக் கண்டித்து, காரைக்காலில் மதகடி சிங்காரவேலர் சிலை அருகே இன்று (14) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மீனவர்களின் குடும்பத்தினர், மீனவர் சங்க பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.


கண்டன ஆர்ப்பாட்டத்தில், இந்திய அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுத்து, தமிழக மீனவர்களை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும், தமிழக மீனவர்களை துன்புறுத்தும் இலங்கை கடற்படையின் செயல்களை கண்டித்தும், மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரப்பட்டது.



இந்திய மீனவர்களின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, தமிழக அரசும் மத்திய அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் விதமாக ஒரு நிரந்தர தீர்வு அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்களின் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top