இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், நாட்டின் பல பகுதிகளில் E-8 விசா மூலம் வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி பணம் வசூலிக்கும் மோசடி நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் இது தற்காலிகமாக செயல்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட கொரிய E-8 விசா பிரிவின் கீழ் நடைபெறுவதாகவும் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இது குறித்து வெளியிட்ட ஊடக அறிவித்தலில்
எந்தவொரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்திறகோ, தனிநபர் அல்லது குழுவிறகோ E-8 தொழில்வாய்ப்பு அனுமதியை வழங்கவில்லை என தெரிவித்துள்ளது. இந்நிலையில், அந்த நிறுவனங்கள் மற்றும் நபர்கள் சட்டவிரோதமாக பணம் வசூலித்து அவ்வாறு பயிற்சி வழங்குவது முற்றிலும் தவறானது.
இதேபோல், இந்த மோசடியில் ஈடுபடும் மற்றும் ஆதரிக்கும் வேலைவாய்ப்பு முகவர்கள், நபர்கள் மற்றும் இடைத்தரகர்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சட்டப்படி கைதுசெய்யும் என தெரிவித்துள்ளது.
இலங்கை மக்கள், E-8 விசா மூலம் தென்கொரியாவில் அல்லது பிற நாடுகளில் தொழிலுக்காக செல்லும் கனவு கலைப்படுத்தும் முறையால், மோசடியாளர்களிடமிருந்து தடுக்கப்பட வேண்டும் என கோசல விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.