பாலசந்திரனின் மரணம்: காலமும் கர்மாவும் மகிந்த ராஜபக்சவுக்கு அளித்த தண்டனை

tubetamil
0

 விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தொடர்பான செய்திகள் மீண்டும் வெளிவந்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த சம்பவத்திற்காக வருந்துவதாக அவரது மகன் நாமல் ராஜபக்ச தெரிவித்திருப்பது பலத்த விமர்சனங்களையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாலச்சந்திரனின் மரணம் மகிந்த ராஜபக்சவுக்கு காலமும் கர்மாவும் அளித்த தண்டனை என்று குறிப்பிட்டுள்ளார்.


சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், "அப்பாவி பாலகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தொடர்பாக மகிந்த ராஜபக்ச வருந்துவதாக செய்திகள் வெளிவந்திருப்பது உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டியது. அப்பாவி மாணவன் குழந்தையாக இருக்கின்றபோது பிஸ்கட் கொடுத்து அவரை மிக அருகில் வைத்து சுட்டுக்கொன்றார்களோ, அதனை சிந்திக்காத மகிந்தவின் குடும்பம், இப்பொழுதாவது மகிந்த ராஜபக்சவின் வாயால் அதனை ஒரு கனதியான வேதனையாக வெளிப்படுத்தியிருப்பதை மிக அவதானத்துடன் பார்க்கிறோம்" என்று கூறினார்.


மேலும், "இந்த மண்ணில் மிகப்பெரிய மனிதப் பேரவலங்களை நடத்துவதற்கு காரணமாக இருந்த மகிந்த ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச மற்றும் அவரின் குடும்பம் சார்ந்தவர்கள் இன்றாவது ஈழத்தமிழர்களுக்கு நடந்த அநீதி தொடர்பாக மெல்ல வாய் திறக்க நினைப்பது காலமும் கர்மாவும் அவர்களுக்கு கொடுத்த தண்டனையாகவே கருதுகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.


மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில், யுத்தம் முடிந்த பின்னர் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினையை தீர்க்கக்கூடிய மிகப்பெரிய தலைவராக அவர் இருந்தார். சிங்கள மக்களின் அதிகமான ஆதரவும் அவருக்கு இருந்தது. இனப்பிரச்சனையை தீர்த்திருக்க முடியும், ஆனால் அவர் வரலாற்றில் பிழை விட்ட தலைவராக வாழ்கின்றார் என்றும், அவர் இப்பொழுதாவது உணர தலைப்பட்டிருப்பது வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக பார்க்கிறோம் என்றும் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top