மூக்குத்தி அம்மன் 2 - வில்லனாக அருண் விஜய்!

tubetamil
0

 2020 ஆம் ஆண்டு வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நயன்தாரா, ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில், காமெடி மற்றும் ஃபேண்டஸி கலந்த இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானாலும், அது மாபெரும் ஹிட்டாகி ரசிகர்களின் மத்தியில் தனியிடம் பிடித்தது. இதன் இரண்டாம் பாகம் உருவாகும் அறிவிப்பு வெளியானதில் இருந்தே, ரசிகர்கள் இப்படத்திற்கான அப்டேட்ஸை எதிர்பார்த்து வந்தனர்.



மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கான தயாரிப்பு வேலைகள் தொடங்கி, இதற்கு முன்னதாக இயக்குநராக சுந்தர்.சி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை யார் செய்யப்போகிறார் என்பதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. தற்போதைய தகவல்படி, அருண் விஜய் இப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


வில்லனாக நடித்த என்னை அறிந்தால் படத்திற்குப் பிறகு, அருண் விஜய் தொடர்ந்து கதாநாயகனாகவே நடித்துவந்தார். அவருடைய மாஸான கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால், தற்போது மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அவர் தயாராகியிருக்கிறார். மேலும், தனுஷ் இயக்கும் இட்லி கடை படத்திலும் அவர் வில்லனாக நடிக்கலாம் என்ற தகவல் பரவியுள்ளது.


மூக்குத்தி அம்மன் 2 படத்தில் வில்லனாக அருண் விஜய் இணைவது ரசிகர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வில்லன் கதாபாத்திரத்தில் அவர் எப்படி மிரள வைக்கப் போகிறார் என்பதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்!

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top