காதல் தோல்வியின் விளைவாக வினோத திருமணம் – ஆட்டுக்குட்டியுடன் இணைந்த இளைஞர்!

tubetamil
0

இந்தியாவின் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் , தனது காதல் தோல்வியால் மனமுடைந்த நிலையில் அதிர்ச்சிகரமான முடிவெடுத்து, தனது வளர்ப்பு ஆட்டுக்குட்டியுடன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த 27 வயது பகவான் சிங் என்பவர், பல மாதங்களாக வளர்த்து வந்த தனது ஆட்டுக்குட்டியுடன் ஹிந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். காதல் தோல்வியால் துவண்டுபோன இவர், தனது செல்லப் பிராணிக்கு மாலை அணிவித்து, பொட்டு வைத்து திருமண நிகழ்வை நடத்தினார். இதற்குப் பின், அந்த ஆட்டுக்குட்டிக்கு "பூஜா" என பெயரிட்டு, திருமண புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

"நான் இந்த ஆட்டை பல மாதங்களாக வளர்த்து வருகிறேன். அது என்னுடன் நெருக்கமாக உள்ளது. எனவே இதனைத் திருமணம் செய்வதற்கு முடிவு செய்தேன்" என பகவான் சிங் தெரிவித்துள்ளார்.


இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. காதல் தோல்வியின் தாக்கம் சிலரிடம் இவ்வாறான வினோத முடிவுகளை எடுக்க வழிவகுப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top