ஐபிஎல் 2025 தொடரின் பரபரப்பான ஒரு போட்டியில், விராட் கோலியின் உணர்வுப்பூர்வமான ரியாக்சன்கள் இரண்டும் இணையத்தில் தீயாய் பரவி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான நேற்றைய மோதலில் இந்த சினிமா சாயல் சம்பவங்கள் நடந்தன.
போட்டியின் தொடக்கத்தில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி, ஆட்டத்தை ஆட்டிப்படைத்தது. 20 ஓவர்கள் முடிவில் 221 ஓட்டங்கள் குவிக்கப்பட்டன.
இதில் நடந்த ஒரு சுவாரஸ்யமான தருணம் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தது. பும்ரா தனது 2வது ஓவரை வீசும் போது, படித்தார் தடுத்து ஆடிய பந்தை அவர் நேராக விராட் கோலியின் பக்கம் அடிக்க முயன்றார். ஆனால் நேர்த்தியாக தவிர்த்த கோலி, சிரித்தபடி பும்ராவிடம் நடந்துசென்று, “நீ என்னை ஆட்டமிழக்கச் செய்றியா?” என பாசமான கோபத்தில் முக பாவனையுடன் பேசிய வீடியோ, சமூக ஊடகங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது.d.
மேலும், மும்பை அணியின் 12வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் ஒரு உயரமான ஷாட்டை விளையாடினார். பந்தை பிடிக்க முனைந்த யஷ் தயாள் மற்றும் ஜிதேஷ் சர்மா இருவரும் ஒரே நேரத்தில் மோதிக் கொண்டு பந்தை தவறவிட்டனர். இந்த தருணம் கோலிக்கு வேதனையளித்தது. கோபம் கொண்ட கோலி, தன் தொப்பியை தரையில் வீசி தனது அக்கிரமத்தை வெளிப்படுத்தினார். இந்த காட்சியும் இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பியுள்ளது.