ஒரே நேரத்தில் மாமனாரும், மருமகனும் பலி!!

tubetamil
0

 திருகோணமலை - ஈச்சிலம்பற்று - சூரிய நகரில் மின்சாரம் தாக்கியதில் 29 மற்றும் 47 வயதான இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

காணி உரிமையாளரான 47 வயது நபர், வயலில் பொருத்தப்பட்டிருந்த யானைத் தடுப்பு மின் வேலியை சுத்திகரிப்பு செய்த போது மின்சாரம் தாக்கியுள்ளது.

அவரை மீட்க முற்பட்ட அவரது மகளின் கணவரான 27 வயதுடைய இளைஞரும் மின்சார தாக்கத்துக்கு உள்ளானார்.பின்னர் அவர்கள் இருவரும் ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top