கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும் பலத்த பாதுகாப்பு

Editor
0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிகிற்சை பெறும் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ஆகஸ்ட் 22 ஆம் திகதி பிற்பகல் கைது செய்யப்பட்டார்.


ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியல் 

கைதான ரணில், கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பிற்பகலில் ரணிலின் வழக்கு; முன்னிலையாக உள்ள 300 சட்டத்தரணிகள் ! பரபரப்பில் தென்னிலங்கை

உடல்நலக்குறைவு காரணமாக ரணில் விக்ரமசிங்கவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பின்னர் அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றபட்டிருந்த நிலையில் இன்று வைத்தியசாலைக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top