தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர் நிவேதா பெத்துராஜ். சினிமா மட்டும் இல்லாமல் பேட்மிட்டன், ஃபார்முலா கார்பந்தயங்கள் என விளையாட்டிலும் ப புகுந்து விளையாட கூடிய ஆள் இவர்.
மேலும் தனக்கு எதிராக எந்த ஒரு வதந்தி வந்தாலும் அதற்கு குரல் கொடுத்து அந்த பிரச்சனையை முடித்து வைப்பதில் கில்லாடி. அப்படித்தான் சமீபத்தில் இவர் பிரபல அரசியல் வாரிசு ஒருவருடன் நெருக்கமாக இருக்கிறார்.
இவர் தாங்க என் ஆளு
அந்த அரசியல் வாரிசை இவருக்கு 50 கோடியில் துபாயில் பங்களா வாங்கி கொடுத்திருக்கிறார் என்று கிசுகிசுக்கள் வந்தது. இதற்கு நிவேதா கடுமையான பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் தான் தற்போது தன்னுடைய காதலரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறார்.
இவருடைய காதலரின் பெயர் ரஜித் இப்ரான். அவருடைய instagram ஐடியையும் டேக் செய்துதான் நிவேதா புகைப்படம் பதிவிட்டு இருக்கிறார். ரஜித் மாடலிங் துறையில் இருப்பதோடு மட்டுமில்லாமல் மிகப்பெரிய தொழிலதிபர்.
புகைப்படம் பதிவிட்டதிலிருந்து இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இருந்தாலும் நிவேதா ஹார்ட் எமோஜி மட்டுமே போட்டு பதிவிட்டிருக்கிறார்.

