அனிருத்துக்கு எப்போது திருமணம்...கலாய்த்த சிவகார்த்திகேயன்.

Editor
0

 மதராஸி படம்

அமரன் பட வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகப்போகும் திரைப்படம் மதராஸி.




ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்து முடிந்தது

டிரைலரில் வில்லன் கும்பல் சிவகார்த்திகேயனின் காதலியை பிடித்து வைத்து பிளாக்மெயில் செய்வது போலவும், அவரை காப்பாற்ற இவர் போராடுவது போல கதை அமைந்திருப்பதாக தெரிகிறது.

அனிருத் இசையில் வெளியாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் எப்போதும் போல செம ஹிட் தான்.

அனிருத் திருமணம்

ரசிகர்கள் பலராலும் கேட்கப்படும் அனிருத் திருமணம் குறித்து சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.




அவர், அனிருத்திடம் திருமணம் பற்றி விசாரித்தேன், திருமணமானவர்களுக்கு இரவு 8 மணிக்கு மேல் எங்கிருக்கிறோம் என விசாரிக்க அழைப்பு வரும். ஆனால் அனிருத் தூங்கி எழுந்துகொள்வதே இரவு 8 மணிக்குத்தான்.


அவருக்கு திருமணம் முக்கியமா ஹிட் பாடல்கள் முக்கியமா என யோசித்தேன், ஹிட் பாடல்கள் தான் முக்கியம் என கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் பேசியதை பார்த்தால் இப்போதைக்கு அனிருத் திருமண செய்தி வராது என்பது தெரிகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top