கடவுள் கொடுத்த பரிசு தான் கெனிஷா.. ரவி மோகனின் பேச்சால் கண்கலங்கிய கெனிஷா

Editor
0

 நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனம் திறப்பு விழா நிகழ்ச்சியின் போது கெனிஷாவைக் குறித்து நடிகர் ரவி மோகன் பேசியது வைரலாகி வருகின்றது.



ரவி மோகன்

தமிழ் சினிமாவில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் ரவி மோகன்.

இவர் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் இருக்கின்றனர்.

தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரவிமோகன், ஆர்த்தி இருவரும் பிரிந்துள்ள நிலையில், பாடகி கெனிஷா உடன் வெளியிடங்களுக்கு செல்வது சர்ச்சையை ஏற்படுத்தியது.



ஆனால் இதனை இருவரும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தனது வேலையில் கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கும் கெனிஷா தான் முக்கிய காரணமாகவே இருந்துள்ளார்.

ரவி மோகன் ஆர்த்தி பிரிவதற்கு முக்கிய காரணமே பாடகி கெனிஷா தான் கூறப்படுகின்றது. இதற்கேற்ப இருவரும் கோவில், வெளி நிகழ்ச்சிகளுக்கு ஒரே மாதிரியான ஆடை அணிந்து ஜோடியாக சென்று வருகின்றனர்.

இந்நிலையில் ரவி மோகன் தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நிலையில், இதற்கான விழா ஏற்பாடு நேற்று நடைபெற்றது.அப்பொழுது கெனிஷா உட்பட பல திரை பிரபலங்கள், நண்பர்கள், உறவினர்கள் என கலந்து கொண்டனர். 

மேலும் ரவிமோகன் கெனிஷா குறித்து பேசுகையில், கடவுள் கொடுத்த பரிசு தான் கெனிஷா என்று பேசியுள்ளார். ஒருவர் எங்காவது தேங்கி நின்றுவிட்டால் கடவுள் அவனுக்காக ஒருத்தரை அனுப்பவார். அவ்வாறு தனக்கு அனுப்பப்பட்டவர் தான் கெனிஷா என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

ரவி மோகனின் பேச்சைக் கேட்ட கெனிஷா தனது எமோஷ்னலை அடக்க முடியாமல் கண்கலங்கவும் செய்துள்ளார்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top