மிகப்பெரிய ராஜ நாகத்தை பிடித்த நபர் அதன் விஷத்தை பிரித்தெடுக்கும் காட்சி பார்வையாளர்களை புல்லரிக்க வைத்துள்ளது.
படமெடுத்து நின்ற ராஜநாகம்
பாம்பு என்றாலே நம் அனைவருக்கும் பயம் தான் ஏற்படும். ஏனெனில் பாம்பின் விஷம் மனிதர்களின் உயிரை நொடியில் பறித்துவிடும்.
ஆம் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டதாக இருப்பதாலே மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். காடுகள், வயல்கள் இவற்றில் காணப்படும் பாம்புகள் தற்போது வாகனங்களிலும், குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் வந்து விடுகின்றது.
அதிலும் ராஜநாகம் என்று கூறப்படும் பாம்பு அதிக விஷத்தன்மை கொண்டது. இங்கு நபர் ஒருவர் படமெடுத்து நிற்கும் ராஜநாகத்தை கம்பீரமாக பிடித்துள்ளார்.
குறித்த பாம்பிலிருந்து அதன் விஷத்தை மட்டும் தனியாக பிரித்தெடுக்கின்றார். பாம்பின் விஷம் பல விடயங்களுக்கு பயன்படுத்தப்படுவதால், இதனை அதிக பணம் கொடுத்து வாங்குவதாகவும் கூறப்படுகின்றது.
https://youtube.com/shorts/xvAGRx8NwNU?feature=share
