சுங்கத்தால் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் பிரச்சினை இருக்கலாம்.ஏனென்றால் பரிசோதனை செய்து விடுவிக்கப்பட்ட கொல்களன்களிலேயே போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள்
தொடர்ந்து பேசிய அவர், அந்த கொல்கலன்கள் தொடர்பில் பரிசோதனைகள் நடைபெறுகின்றன.
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களால் கடத்தப்படும் போதைப்பொருள் மற்றும் விநியோகம் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கொடுக்கல் வாங்கல்கள் செய்யும் அரசாங்கம் ஒன்று இருப்பது போல, திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் கொடுக்கல் வாங்கல்கள் செய்யும் அரசாங்கமும் இருக்கிறது.
அதே போல மக்கள் பயன்படுத்தும் பொலிஸ் மற்றும் இராணுவத்தை தவிர அவர்கள் பயன்படுத்தும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் உள்ளனர்.
வரவு - செலவுத் திட்டத்தில் புதிய வரிகள்
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களால் ஒரு அரசாங்கம் நடத்தப்படுகிறது.அப்படியானால் இந்த அரசாங்கத்தை விடுத்து அவர்களின் அரசாங்கத்தில் இணைய வேண்டும்.
அவ்வாறு இல்லா விட்டால், அந்த அரசாங்கத்தை ஒழிக்க வேண்டும்.அதை நாங்கள் கட்டாயம் செய்வோம்.
வரவு - செலவுத் திட்டத்தில் புதிய வரிகளை அறிமுகப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை. பொருளாதாரம் மற்றும் சந்தையில் தேசிய எல்லைகள் இல்லாத உலகில், எந்த நாடும் தனியாக முன்னேற முடியாது,
நல்ல இராஜதந்திர உறவுகள் மூலம் இலங்கையை உலகின் முன்னணிக்கு உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில், ஜப்பானில் வசிக்கும் மகா சங்கத்தினர், மத குருமார்கள், தொழில் வல்லுநர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.