யாழில் 5 வயது சிறுமிக்கு நடு வீதியில் நடந்த துயரம் ; அலட்சியத்தால் துடிதுடித்து பிரிந்த உயிர் !

Editor
0

 யாழ்ப்பாணம் - கேரதீவில் நேற்று (28) இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


ஒரு மோட்டார் சைக்கிளில் நால்வர் பயணித்த நிலையில் நிலைதடுமாறி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.




இதில், சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன் ஏனைய மூவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். தென்மராட்சி - மந்துவிலைச் சேர்ந்த 5 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார். 


இந்தச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top