மீண்டும் கரூர் செல்கிறாரா விஜய்..! அவசர அவசரமாக நடந்த த .வ .க கூட்டம்

Editor
0

த.வெ.க தலைவர் விஜய் கரூர் செல்ல திட்டமிட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்கப்படுவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் வழங்க கரூர் செல்ல திட்டமிட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


சென்னையில் உள்ள த.வெ.க தலைவர் விஜயின் வீட்டுக்கு காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது கரூரில் நடந்த கோர சம்பவத்தை தொடர்ந்து, அவரது வீட்டுக்கு பாதுகாப்பு கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டுக்கு ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 15 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீட்டின் அருகே சாலைத் தடுப்பு


நேற்று இரவு முதல் காவல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. முன்னதாக மத்திய அரசு அவருக்கு ஏற்கனவே 'Y' பிரிவு பாதுகாப்பை வழங்கி உள்ளது.

விஜய் வீடு இருக்கும் பகுதிக்கு சந்தேகப்படும் வகையில் வரும் அனைவரையும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் விஜய் வீட்டின் அருகே சாலைத் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை நீலாங்கரையில் விஜய் தற்போது தங்கி உள்ள அவரது வீடு உள்ள சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top