குக் வித் கோமாளி 6 டைட்டில் வின்னர் ராஜுக்கு பரிசு எத்தனை லட்சம் தெரியுமா..??

Editor
0

 ராஜு 



பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக களமிறங்கி, மக்கள் மனதை வென்று டைட்டில் வின்னர் ஆனார் ராஜு ஜெயமோகன்.



பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகமான இவர் குக் வித் கோமாளி சீசன் 6ல் போட்டியாளராக என்ட்ரி கொடுத்தார். முதலில் சற்று தடுமாறிய ராஜு, பின் தனது சமையலால் அனைவரையும் மிரள வைத்தார்.


பைனல் போட்டிக்கு தேர்வான ராஜு தற்போது குக் வித் கோமாளி சீசன் 6ன் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார். ரசிகர்கள் அனைவரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.



மேலும், ஒரே நபர் பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி என இரண்டு நிகழ்ச்சிகளிலும் டைட்டில் வின்னர் ஆகியுள்ளது இதுவே முதல் முறையாகும்.


பரிசு தொகை

இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 6ன் டைட்டில் வின்னர் ஆகியுள்ள ராஜுக்கு பரிசு தொகை எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? டைட்டில் வின்னர் ராஜு ரூ. 5 லட்சம் பரிசை தொகையை தட்டிதூக்கியுள்ளார். 



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top