வெளியான நாமலின் மொத்த சொத்து தொடர்பான விபரம்..!

Editor
0

 நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் கடன்களை தவிர்த்து 74 மில்லியன் ரூபா நிகர சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


அவரால் சமர்ப்பிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கையில் உள்ள தகவல்களின்படி இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


நாமலுக்கு சொந்தமாக 3 நிலங்கள் இருப்பது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் 1 நிலம் பெற்றோரிடம் இருந்து பெறப்பட்டதும் எஞ்சிய 2 நிலங்களும் அவரால் வாங்கப்பட்டதும் ஆகும். அதில் ஒரு நிலத்தின் மதிப்பு 55 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.


நிகர சொத்து


அத்துடன், 31  பவுன் நகைகள் மற்றும் 23 தங்க நாணயங்கள் நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமாக உள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு 7.7 மில்லியன் ரூபா ஆகும்.





மேலும், நாமல் ராஜபக்ச அவரது திருமணத்தின் போது, வரதட்சணையாக LSR நிறுவனத்தின் வணிகங்களில் 50 சதவீதத்தை பெற்றுள்ளார்.


இதனைத் தவிர்த்து நாமலின் மொத்த சொத்துக்கள் 168 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.




அவரின் மொத்த கடன் 94 மில்லியன் ரூபா ஆகும். இதன்படி, அவரின் நிகர சொத்துக்களின் பெறுமதி 74 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top