கொழும்பு ஹோட்டல் கழிப்பறையில் தோட்டாக்கள்; பொலிஸார் திகைப்பு!

Editor
0

 கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள ஒரு ஹோட்டல் கழிப்பறையில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து 17 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

கழிப்பறையை சுத்தம் செய்யச் சென்றபோது குப்பைத் தொட்டியில் துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பதைக் கண்ட ஊழியர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.



குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் தோட்டாக்களை கைப்பற்றியுள்ளதுடன்   இது தொடர்பான பரிசோதனையில் 9MM வகை தோட்டாக்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
      யார் கழிப்பறைக்குள் நுழைந்து குப்பைத் தொட்டியில் தோட்டாக்களை கொட்டியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top