டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து கலப்படம்; மக்களே அவதானம்

Editor
0

திருகோணமலையில் டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து பயணித்த இரண்டு டிப்பர் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வாகனத்தில் இரண்டு சாரதிகளும் கைது செய்யப்பட்டனர்.

திருகோணமலை-கொழும்பு பிரதான வீதி 94 கட்டைபகுதியில், கந்தளாய் பொலிஸார் மேற்கொண்ட திடீர் வாகன சோதனையிலேயே இவ்வாறு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர்கள், கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில், டீசலின் விலையை விட மண்ணெண்ணெயின் விலை குறைவாக இருப்பதால், அதிக இலாபம் ஈட்டும் நோக்கில் இந்த மோசடி முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து பயன்படுத்துவது வாகனங்களின் என்ஜினுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் எனவும் கந்தளாய் பொலிசார் தெரிவிக்கின்றனர்   



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top