பெண்ணாக மாறியவர்; சர்ச்சையை முடிக்க பிரான்ஸ் அதிபர் மனைவி எடுத்த முடிவு!

Editor
0

 பிரான்ஸ் அதிபர் ட்இமானுவேல் மேக்ரோனின் மனைவி  பிரிஜிட். இவர் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க வலதுசாரி ஆதரவு அரசியல் விமர்சகர் கேண்டஸ் ஓவன்ஸ், 'பிரிஜிட் ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர்' என, விமர்சித்தார்.

இதையடுத்து, ஓவன்ஸ் மீது அமெரிக்க நீதிமன்றத்தில், பிரிஜிட் அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.

மூன்று குழந்தைகளுக்கு தாய்

விசாரணை நடந்து வரும் சூழலில், பெண் என்பதை நிரூபிக்க அறிவியல்பூர்வ ஆதாரங்களை அவர் சமர்ப்பிக்க உள்ளார்.

மூன்று குழந்தைகளுக்கு தாயான பிரிஜிட், பாலினம் குறித்த வதந்திகளை எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல.

பிரான்ஸ் அதிபர் மக்ரோன் மனைவியும் பிரான்சின் முதல் பெண்மணியுமான பிரிஜிட் மக்ரோன் ஒரு காலத்தில் ஆணாக இருந்ததாகவும், பாலின மாற்றத்திற்கு உட்பட்டு பெண்ணாக மாறியதாகவும் வெளியான கருத்துக்கள் 2017ஆம் ஆண்டு முதல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வழக்கின் ஒரு பகுதியாக, பிரிஜிட் மக்ரோன் கர்ப்பம் தரித்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பிற அறிவியல் ஆதாரங்களை அமெரிக்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக மக்ரோனின் வழக்கறிஞர் டாம் கிளேர் தற்போது தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, பிரான்சில் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை பரப்பிய இரண்டு பெண்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து அவர் வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top