யேமன் நாட்டின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றிரவு(10.09.2025) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் என்றும் 100இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்றும் ஹவுதி இயக்கம் அறிவித்துள்ளது.
தலைநகர் சனா மற்றும் அல்-ஜாஃப் மாகாணம் இரண்டிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹவுதிகளால் நடத்தப்படும் சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.
தவறிய இலக்கு
ஏற்கனவே, கட்டாரில் ஹமாஸின் மூத்த பேச்சுவார்த்தையாளர் ஒருவரை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் இலக்கு தவறிய நிலையிலேயே ஹவுதிகள் மீதான இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
