வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் ; தென்னிலங்கையில் பரபரப்பு

Editor
0

 தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பொலிஸார் சோதனை செய்த போது, ​​வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு லொறியில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பொதிகளையும் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், வீட்டில் இருந்த மற்றொரு நபர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது விசாரணைகளை தொடங்கியுள்ளநர். அத்துடன், இந்த சம்பவம் குறித்து அரச இரசாயன பகுப்பாய்வாளரால் பரிசோதனையும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top