பதுளை - மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள வியானா கால்வாயிலிருந்து நேற்று (14) மாலை துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரி- 56 ரக துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வியானா கால்வாயின் நீர்மட்டம் குறைவடைந்ததன் காரணமாக இந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கால்வாயின் மேல்புறத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
