வறிய மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ஜனாதிபதி நிதியம்!

Editor
0

 பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் நேற்று (14) கண்டி மாவட்ட செயலகத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்றது.


மஹையாவ பிரதேசத்தில் , மஹையாவ பூர்னவத்த மேற்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2025 மே 31 திகதி ஜனாதிபதி நிதியத்தின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் போது, அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவது பொருத்தமானது என்பது கண்டறியப்பட்டது.



அதன் ஒரு கட்டமாக, பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் முதல் கட்டமாக, 28 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.




இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுனி, பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க, மத்திய மாகாண பிரதம செயலாளர் எம்.ஏ. பிரேமசிங்க, கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த மற்றும் பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.





கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top