இயற்கையான வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துவதன் மூலம் கூந்தலை மென்மையாக மாற்றலாம்.
அந்தவகையில், பட்டுபோன்ற மென்மையான கூந்தலை பெற இந்த இரண்டு பொருட்களை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தயிர்- 1 கப்
- கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி
பயன்படுத்தும் முறை
முதலில் கறிவேப்பிலையை எடுத்து நன்கு கழுவி மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தயிர் சேர்த்து கெட்டியான பேஸ்டாக அரைக்கவும்.
அடுத்து இதனை ஒரு கிண்ணத்தில் சேர்த்து மென்மையாக வரும்வரை கைவிடாமல் நன்கு கலக்கவும்.
இப்போது இந்த கலவையை தலைமுடியின் உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும்.
பின்னர் அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு மென்மையான ஷாம்பு கொண்டு கழுவவும்.
இந்த இயற்கை வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பயன்படுத்தி வர தலைமுடி நல்ல பளபளப்பாக மென்மையாக மாறும்.