வெளிநாட்டு காதலனால் பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

Editor
0

 தென்னிலங்கையில் பெண் ஒருவரை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் பல்கலைக்கழக மாணவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். எல்பிட்டிய மீட்டியாகொடவில் வசிக்கும் 25 வயது பெண்ணிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் பறிக்க முயன்ற வேளையில் மீட்டியாகொட பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.



பொலிஸ் விசாரணை

பொலிஸ் விசாரணையின் போது, ​​தனக்குத் தெரிந்த பிரேசிலிய நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கு அமைய பணத்தைப் பெற முயன்றதாக மாணவன் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பபட்ட பெண் டெலிகிராம் செயலி மூலம் சுமார் நான்கு மாதங்களாக பிரேசில் நாட்டு இளைஞருடன் உறவில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த உறவு பின்னர் காதல் உறவாக வளர்ந்துள்ளது. குறித்த பெண்ணை திருமணம் செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்

இந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்பட்ட நெருக்கமான உறவு காரணமாக, குறித்த பெண்ணுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.



சில மாதங்களில் குறித்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடவுள்ளதாக மிரட்டி பணம் கோரியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.


குறித்த பல்கலைக்கழக மாணவனிடம் பணத்தை வழங்குமாறு வெளிநாட்டவர் கோரிக்கை விடுத்த நிலையில், இது குறித்து பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top