யாழில் துயரை ஏற்படுத்திய இளம் சுகாதார அதிகாரியின் மரணம் ; அமெரிக்க கம்பனியால் நேர்ந்த சம்பவம்!!

Editor
0

 யாழ்ப்பாணத்தில் ஒன்லைன் வர்த்தகத்தில் ஒரு கோடி ரூபா பணத்தை இழந்த சுகாதார உத்தியோகத்தரான குடும்பஸ்தர் ஒருவர் நேற்று(11) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.


யாழ்ப்பாணம் - கட்டுவன் பகுதியை சேர்ந்த 30 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வர்த்தகத்தில்  நஷ்டம்




இது குறித்து மேலும் தெரியவருகையில்,


குறித்த நபர் அமெரிக்க கம்பனி ஒன்றில் ஒன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். குறித்த வர்த்தகமானது சரிவடைந்துள்ளதால் அவருக்கு ஒருகோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 


இதனால் அவர் மன விரக்தியடைந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.


இதற்கு முன்னரும் இவர் ஒருதடவை பல இலட்சம் ரூபா நஷ்டத்தை சந்தித்த நிலையில் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அந்த நஷ்டத்தில் இருந்து அவரை மீட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top