யாழில் பல்பொருள் அங்காடியில் பாரிய தீ விபத்து : எரிந்து நாசமான பொருட்கள்!

Editor
0

 யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் தீ விபத்து ஏற்பட்டதால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நேற்றையதினம் (15) இரவு இந்த அனர்த்தம் நிகழ்ந்தமையால் கடையில் இருந்த தளபாடங்கள் மற்றும் சரக்குகள் என்பன சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, “ குறித்த கடை உரிமையாளர் நேற்றையதினம் கடையினை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.


காவல்துறையினர் விசாரணை

இந்தநிலையில் மீண்டும் இன்றையதினம் காலை வியாபார நடவடிக்கைகளுக்காக கடையினை திறந்தபோது கடையின் உட்பகுதி முழுவதும் எரிந்து உள்ளதை அவதானித்து உள்ளார்.




அதன் பின்னர் குறித்த சம்பவம் தொடர்பாக மருதங்கேணி காவல்துறையினரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.


இச்சம்பவம் தொடர்பாக மருதங்கேணி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top