நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பாணந்துறை - கர்மாந்தபுர வீதியில் கார் ஒன்று வழுக்கிச் சென்று கெரபன் கால்வாயில் கவிழ்ந்துள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் காரில் இரண்டு பேர் பயணம் செய்துள்ள போதும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் பிரதேசவாசிகள் கயிறுகளின் உதவியுடன் காரை மீட்டுள்ளனர்.முன்னால் ஒரு வாகனம் வந்தபோது காரின் சாரதி பிரேக்கை மிதித்தபோது , மழை காரணமாக வீதி வழுக்கும் தன்மை கொண்டதால், கார் வீதியை விட்டு விலகி கெரபன் கால்வாயில் கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.