முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்ட விவகாரத்தில் இதுவரை எந்த அடிப்படை உரிமை மீறல் மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விக்கிரமசிங்க, 2025 ஆகஸ்ட் 22 அன்று பொதுமக்களின் நிதியை தனிப்பட்ட வெளிநாட்டு பயணத்திற்காக தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் குற்றப்புலனாய்வு துறையால் (CID) கைது செய்யப்பட்டார்.
அவர் பின்னர் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் 26 வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டதுடன், பின்னர் ரூ.50 இலட்சம் பெறுமதியான மூன்று சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 126(2) ஆம் கட்டளையின் படி, அடிப்படை உரிமை மீறல் ஏற்பட்டால் ஒரு மாதத்துக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், ரணில் தரப்பில் செப்டம்பர் 26 வரை எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், கைது விவகாரத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் எந்தவித நிவாரணத்தையும் நாடவில்லை என்பது உறுதியாகின்றது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 29 அன்று நடைபெறவுள்ளது.