நிச்சயதார்த்தம் உண்மையா? பொய்யா? வாய்க்கொடுத்து மாட்டிக்கொண்ட ராஷ்மிகா மந்தனா...!!

Editor
0

 நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார். தற்போது ஹிந்தியிலும் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான்.


அவர்கள் ஜோடியாக வெளிநாடு ட்ரிப் சென்று வரும் புகைப்படங்களும் அடிக்கடி வைரலாகின்றன. சில தினங்களுக்கு முன் தான் இவர்கள் நிச்சயம் செய்து கொண்டனர் என்று கூறப்பட்டு வருகிறது.இந்நிலையில் தம்மா என்ற படத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார். 21 ஆம் தேதி ரிலீஸ்யாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.




பேட்டியொன்றில், மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று தெரிகிறது என்று நிச்சயதார்த்த விஷயம் பற்றி மறைமுகமாக தொகுப்பாளர் கேட்டுள்ளார். அதற்கு ராஷ்மிகா, இல்லை, இல்லை..உண்மையில் நிறைய இருக்கிறது, ஏனெனில் அவ்வளவு விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது.


இருந்தாலும் எல்லாவற்றின் சார்பாகவும் உங்களது வாழ்த்துக்கலை எடுத்துக்கொள்கிறேன் என்று வெட்கப்பட்டுக்கொண்டே பதிலளித்துள்ளார் ராஷ்மிகா.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top