ஏமன் நாட்டின் கடற்கரை அருகே MV Falcon என்ற LPG (எல்பிஜி) கப்பலில் சனிக்கிழமை எதிர்பாராத தீ விபத்து மற்றும் வெடிப்பு சம்பவம் நடந்தது.
கப்பல், ஓமானின் சோஹார் துறைமுகம் இருந்து ஜிபூட்டிக்குச் செல்கிற போது இந்த விபத்து ஏற்பட்டது. வெடிப்பு காரணமாக கப்பல் கட்டுப்பாட்டை இழந்து கடலில் மிதக்கத் தொடங்கியது மற்றும் கப்பல் 15% பகுதிக்கு தீப்பிடித்தது.
விபத்து காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது. முதற்கட்ட தகவல்கள், சம்பவம் தற்செயலாக ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கப்பலை விட்டு 24 மாலுமிகள் வெளியேற, இதில் 23 பேர் இந்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடந்த மீட்பு நடவடிக்கைகளில், இந்த 23 இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கப்பலில் திரவ பெட்ரோலிய வாயு நிரம்பியிருப்பதால், எந்த நேரத்திலும் மிகப்பெரிய வெடிப்பு ஏற்படக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட கப்பலிலிருந்து விலகி இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.