எஃப்-35 போர் விமானங்களை அமெரிக்கா சௌதி அரேபியாவுக்கு விற்பதால் இஸ்ரேலுக்கு ஏற்படும் சிக்கல்

Author
0

 


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செளதி அரேபியாவுக்கு எஃப்-35 போர் விமானங்களை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்


மெரிக்காவின் மிகவும் மேம்பட்ட போர் விமானமான எஃப்-35 போர் விமானங்களை செளதி அரேபியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.

செளதி அரேபியாவுக்கு இந்தப் போர் விமானங்கள் கிடைத்தால், அந்தத் தொழில்நுட்பத்தை சீனா அறிந்துகொள்ளக் கூடும் என்ற கவலைகள் ஒருபுறம் இருந்தபோதிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார்.

செளதி அரேபியாவிடம் இந்த சக்திவாய்ந்த விமானங்கள் இருப்பது, மத்திய கிழக்கு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இஸ்ரேலின் "தனித்துவமான ராணுவ முன்னிலையை" பாதிக்கக்கூடும் என டிரம்ப் நிர்வாகத்தில் இருப்பவர்களும்கூட கவலை தெரிவிக்கின்றனர்.

செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அமெரிக்க பயணத்தின்போது பேசியபோதும், அதிபர் டிரம்ப், அமெரிக்கா இந்தப் போர் விமானங்களை செளதி அரேபியாவுக்கு வழங்கப் போவதாக மீண்டும் குறிப்பிட்டார்.

டிரம்பின் முதல் பதவிக் காலத்தில் எஃப்-35 போர் விமான விற்பனை தொடர்பான ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டது, ஆனால் அது இறுதி முடிவை எட்டவில்லை.

வெள்ளை மாளிகைக்கு செளதி பட்டத்து இளவரசர் வருகை தருவதற்கு ஒரு நாள் முன்னதாக, செளதி அரேபியாவுக்கு எஃப்-35 போர் விமானங்களை விற்பனை செய்யவிருப்பதாக டிரம்ப் கூறியிருந்தார்.

"நாங்கள் எஃப்-35 விமானங்களை விற்பனை செய்வோம் எனக் கூற விரும்புகிறேன். அவர்கள் (செளதி அரேபியா) அவற்றை வாங்க விரும்புகிறார்கள். அவர்கள் நம் சிறந்த கூட்டாளியாக இருந்து வருகின்றனர்," என்று ஓவல் அலுவலகத்தில் பேசியபோது டிரம்ப் கூறினார்.

செவ்வாய்க் கிழமையன்று டிரம்புக்கும் பட்டத்து இளவரசருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளின்போது, எஃப்-35 போர் விமானங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top