கெஹெல்பத்தர பத்மேவின் தாயாருக்கு சொந்தமான லொறியில் சட்டவிரோத செயற்பாடு ; இருவர் கைது

Author
0

 போதைப்பொருள் கடத்தல்காரர் கெஹெல்பத்தர பத்மேவின் தாயாருக்கு சொந்தமான லொறியொன்றை ரம்புக்கனை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.


ரம்புக்கனை பொலிஸார்  நேற்று (20) நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின் போது மணல் கடத்தலில் ஈடுபட்ட குறித்த லொறி  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



 மணல் கடத்தல்

உரிமம் இல்லாமல் மணல் கடத்தியதற்காக லொறியின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


இதன்போது லொறி கம்பஹா பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளதுடன் குறித்த பெண் கெஹல்பத்தர பத்மேவின் தாயார் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top