இந்தியாவின் பாரா பீல்ட் மருத்துவமனை: நன்மை பெறும் ஆயிரக்கணக்கானோர்!

Editor
0

 ஒபரேசன் சாகர் பந்துவின் ஒரு பகுதியாக, இந்தியாவினால் மஹியங்கனையில் அமைக்கப்பட்டுள்ள பாரா பீட்ல் மருத்துவமனையில் நாளொன்றுக்கு 1200 நோயாளிகள் வரை சிகிச்சைப் பெறுவதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.


டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான அழிவு மற்றும் சேவை இடையூறுகளைத் தொடர்ந்து, இந்திய இராணுவத்தின் சத்ருஜீத் படைப்பிரிவின் ஒருங்கிணைந்த பணிக்குழுவின் 78 பேர் கொண்ட குழுவுடன், இந்த முழு அளவிலான பாரா ஃபீல்ட் மருத்துவமனை, 2025 டிசம்பர் 2ஆம் திகதியன்று இலங்கைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.

உயிர்காக்கும் பராமரிப்பு

பின்னர் பிராந்தியத்தில் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக கண்டிக்கு அருகிலுள்ள மஹியங்கனை பகுதியில் குறித்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், குறித்த மருத்துவமனை, அதிர்ச்சி முகாமைத்துவம், அறுவை சிகிச்சைகள் மற்றும் பொது மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட முக்கியமான உயிர்காக்கும் பராமரிப்பை வழங்கி வருவதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top