நாட்டுக்கு வந்த பிரித்தானியா வாழ் இலங்கை பெண்ணின் செயல்; யாரும் இப்படி செய்வார்களா?

Author
0

   பிரித்தானியாவில் வாழும் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரின் நெகிழ்ச்சியான செயல் குறித்து பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.


திருமண நிகழ்வொன்றுக்காக இலங்கை வந்த பிரித்தானிய வாழ் 61 வயதான ஐரி பெரேரா என்ற பெண்ணே , நாட்டில் வெள்லத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.



தனது வீட்டில் வீடிழந்த 25 பேரை தங்க வைத்து பராமரிப்பு

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கம்பளையில் தனக்கு சொந்தமான வீட்டில், வெள்ளத்தினால் வீடிழந்த 25 பேரை தங்க வைத்து பராமரித்து வருகிறார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் பொருட்களை வழங்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். மக்கள் தண்ணீர், உணவு, உடைகள் மற்றும் மருந்துகள் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவதாக கவலை வெளியிட்டுள்ளார்


பலரின் அனைத்து உடமைகளும் வெள்ள நீரில் அடித்துச் சென்றுள்ளமையால், மக்கள் நிர்க்கதியாகி உள்ளனர். மீண்டும் மண்சரிவு அபாயம் உள்ள நிலையில், கம்பளை பகுதியில் நீண்டகாலமாக வசித்து வந்த பலர் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நிவாரணங்களை சேகரிக்கும் நடவடிக்கையையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையில் தானும் ஈடுபட்டுள்ளதாக ஐரி பெரேரா தெரிவித்துள்ளார்.


மேலும் மாத இறுதியில் பிரித்தானியா செல்லும் அவர், மக்களுக்கான நிதி சேகரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top