நாயாறு பகுதியில் உடைந்த இரண்டு பாலங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Editor
0

 நாயாறு பாலத்தில் உள்ள இரண்டு பாலங்களில் ஒரு பாலத்தின் பணிகள் மட்டுமே தற்போது நிறைவடைந்துள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு பாலத்தில் நடைபெறும் பணிகள் தொடர்பாக பொதுமக்களிடையே தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவி வருகின்றன.


இதுகுறித்து தெளிவுபடுத்துவதற்காக இந்த அறிவித்தல் முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகால் வெளியிடப்படுகிறது.


மற்றொரு சேதமடைந்த பாலம் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) மூலம் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அந்த பாலத்தின் புதிய பணிகள் இன்று ஆரம்பிக்கப்படுகின்றன.


எனவே, நாயாறு பாலத்தின் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. பொதுமக்கள் நாயாறு பாலத்தை பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top