லண்டன் நீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பு ; தமிழர்களின் உரிமை மீண்டும் வெற்றி!

Editor
0
இந்திய பெருங்கடலின் டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் இலங்கைத் தமிழர்களை இங்கிலாந்து, சில ஆண்டுகளுக்கு முன்னர் சட்டவிரோதமாக தடுத்து வைத்தமை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை ஆட்சேபித்து, பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஆணையாளரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு, லண்டன் நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆணையாளரின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டத்தை வரவேற்பதாக பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள் வரவேற்றுள்ளனர்.


குறித்த தீவில் தமிழர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டமையால், இங்கிலாந்தில் வரி செலுத்துவோருக்கான செலவு கணிசமாக அதிகரித்துள்ளமையையும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.


முன்னதாக உலகின் மிகத் தொலைதூரத் தீவுகளில் ஒன்றில், அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டனர் என்பதை நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்தனர்.


எனினும், குறித்த தீர்ப்பை ஆட்சேபித்து, தீவுக்கான ஆணையாளரால் மேன்முறையீடு செய்யப்பட்டது.


இந்த நிலையில், அவரது மேன்முறையீட்டின் நான்கு காரணங்களும் நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டன.


அதன்படி, கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சட்டவிரோத தடுப்புக்காவல் என்ற தீர்ப்பு தற்போது உறுதி செய்யப்பட்ட நிலையில், 60இற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களை நீண்ட காலத்திற்கு சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமைக்காக, பிரித்தானிய அரசாங்கம் மில்லியன் கணக்கான பவுண்டுகளை இழப்பீடாக செலுத்த நேரிடும் என, பிரித்தானிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top