நாட்டை பாதித்த டித்வா சூறாவளியால் ஏற்பட்ட கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் மண் நிரம்பியுள்ளதால், மிகவும் குறைந்தளவில் மழை பெய்தாலும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் காமினி ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தற்போதைய பேரிடர் நிலைமை குறித்து நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மண் சரிவுகள்
அந்த மழையால், தரையில் உள்ள மண் இப்போது நிரம்பி, தண்ணீர் போல பாயும் நிலையை எட்டியுள்ளது.
இதனால் நிலச்சரிவு ஏற்படக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் தற்போது நிலச்சரிவுகள், மண் சரிவுகள், பாறை சரிவுகள் மற்றும் வீடுகளுக்குப் பின்னால் நிலச்சரிவுகள் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொது மக்களுக்கு எச்சரிக்கை
தற்போது, தரையில் பல இடங்கள் நிலையற்றதாக இருந்தாலும், மக்கள் அந்த இடங்களில் தங்கியிருக்கும் சந்தர்ப்பங்கள் உள்ளன. நிலச்சரிவுக்கான அறிகுறிகள் உள்ள இடங்களில் மக்கள் இன்னும் தங்கியுள்ளனர்.

