இலங்கையை உலுக்கிய டித்வா புயல் குறித்து முன்னாள் இலங்கை அணித்தலைவர் குமார் சங்கக்கார ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நிவாரணம் மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளுக்கு நாம் அனைவரும் உதவுகிறோம், ஆதரிக்கிறோம், நிதியளிக்கிறோம்.
அதே நேரத்தில், இதுவரை பல உயிர்களைக் காப்பாற்றிய நமது முப்படைகள், காவல்துறை மற்றும் துணிச்சலான பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
