இலங்கை மின்சார சபையின் ஊழியர் உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் முன்மொழியப்பட்டுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக உரிய தீர்வுகளை வழங்குமாறு கோரி, மின்சார சபை தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு 24 மணித்தியால கால அவகாசம் வழங்கியுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.மின்சார சபை ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தாததைக் கண்டித்து, நேற்று நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் பெரும் வெற்றியளித்துள்ளதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் சுமார் 21 தொழிற்சங்கங்கள் பங்கேற்றிருந்தன. ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இதற்காகவே இந்த 24 மணித்தியால கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, மின்சார சபை பிரச்சினையை விரைவாக தீர்ப்பது ஊழியர்களுக்கும் மக்களுக்கும் நல்லது என குறிப்பிட்டுள்ளார்.மேலும், இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நாட்டை இருளில் தள்ளும் வகையில் அமையக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.மின்சார சபை தொழிற்சங்கங்கள் 24 மணி நேர எச்சரிக்கை !!!
பிப்ரவரி 27, 2026
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க

.jpg)