திருமுருகண்டி பகுதியில் மோட்டார் சைக்கிள்–கார் மோதி ஒருவர் உயிரிழப்பு !!

Author
0

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருமுருகண்டி ஏ9 பிரதான வீதியில் நேற்று (15) மோட்டார் சைக்கிளும் மகிழுந்து காரும் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு நபர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மற்றொருவர்  கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலயில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து தொடர்பில் , காரை செலுத்தி வந்த திருகோணமலை வைத்தியரை போலீசார் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவு தற்போது விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top