வீட்டிற்குள் நுழைந்த குழு தாக்குதல் – இளைஞர் உயிரிழப்பு !!!

Author
0

கொழும்பு கிராண்ட்பாஸ், சத்தம்வத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நேற்று (27) அதிகாலை நுழைந்த ஒரு குழுவால், அங்கு தங்கியிருந்த ஒரு இளைஞனை வாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக கிராண்ட்பாஸ் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தீவிர விசாரணை

உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ், வெஹெரகொடெல்ல பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் என்று காவல்துறை தெரிவிக்கின்றனர்.குறித்த இளைஞன் வீட்டில் இருந்தபோது, ​​அடையாளம் தெரியாத இளைஞர்கள் குழுவொன்று வீட்டிற்குள் புகுந்து இளைஞனை தாக்கி கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் வீட்டின் உரிமையாளர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிப்பதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top