‘டித்வா’ புயல் பாதிப்பு: பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒருமுறை விசேட உதவி !!!

Author
0

லலித் அத்துலத்முதலி மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தின் அறங்காவலர் சபையினால், ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் விசேட புலமைப்பரிசில் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இறுதியில் நாட்டைத் தாக்கிய 'டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பொருளாதார நிவாரணங்களை வழங்கும் நோக்கில் இந்த விசேட திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.இந்த விசேட புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களைக் கோரும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதற்கான விண்ணப்பப் படிவங்களை www.mahapola.lk என்ற மகாபொல இணையத்தளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top