புளுகொல்ல வனப்பகுதியில் புதையல் தோண்டிய ஆறு பேர் கைது !!

Author
0

லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளுகொல்ல - கும்புக்கன் ஓயா வனப்பகுதியில் புதையல் தோண்டிய ஆறு சந்தேகநபர்கள் நேற்று சனிக்கிழமை (14) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அகழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்கள் 49 முதல் 61 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் லுணுகலை, எம்பிலிப்பிட்டிய, பிலியந்தலை, தனமல்வில, மில்லபெத்த மற்றும் ஹொப்டன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுனுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top