அம்பாறையில் மோட்டார் சைக்கிள் விபத்து – முல்லைத்தீவு இராணுவ வீரர் உயிரிழப்பு !!!

Author
0

மோட்டார் சைக்கிள் ஒன்று அம்பாறை, உஹன சமனபெத்த பரிவெனாவிற்கு அருகில் வைத்து வீதியை விட்டு விலகி, மின்சாரக் கம்பத்துடன் மோதியதில் முல்லைத்தீவு இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இலங்கை இராணுவத்தின் மின்சார மற்றும் இயந்திரவியல் பிரிவைச் சேர்ந்த 22 வயதுடைய ஆர்.எச். உதிக மலிந்த ரணசிங்க என்ற இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று புதன்கிழமை (25) அன்று இவ் விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இதில் படுகாயமடைந்த நபர் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் முல்லைத்தீவு இராணுவ முகாமில் கடமையாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.விடுமுறையில் வந்திருந்த குறித்த இராணுவ வீரர், பொலன்னறுவையிலுள்ள தனது சித்தியின் வீட்டிற்குச் சென்று, பின்னர் மஹியங்கனையிலுள்ள தனது பாட்டியையும் பார்த்துவிட்டு, அம்பாறை பொல்வத்தப் பகுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே உஹனயிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த போது விபத்து நேர்ந்துள்ளது.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top