Government Medical Officers' Association அறிக்கை – குடிமக்கள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் !!

Author
0

சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரமான சம்பவம், பொதுமக்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒரு பாரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த சங்கம், ஒரு நாட்டிற்குள் குடிமக்களினதும் தொழில் வல்லுநர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எந்தவொரு அரசாங்கத்தினதும் முதன்மையான பொறுப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளது.

எந்தவொரு தொழில் வல்லுநரும் அழுத்தங்கள் அல்லது அச்சுறுத்தல்கள் இன்றி, சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் தமது தொழில்முறை சேவைகளை வழங்குவதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பிற்குள்ளும் வைத்தியர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பாகப் பல பாரிய சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் தொழில்சார் சூழலில் தொழில் வல்லுநர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வலுவான மற்றும் நம்பகமான வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top